ஆந்திர வாக்குச் சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அடித்து உடைப்பு

இன்று ஆந்திர பிரதேச மாநிலத்தில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று காலை முதலே பொதுமக்கள் மற்றும் பிரமுகர்கள் வரிசையில் நின்று ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர். இந்த சூழலில், சித்தூர், கடப்பா உள்ளிட்ட சில பகுதிகளில் இரு வேறு கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின் விளைவாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. ஆந்திர பிரதேசத்தில் ஆளும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் ஆகிய இரு கட்சிகள் […]

இன்று ஆந்திர பிரதேச மாநிலத்தில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று காலை முதலே பொதுமக்கள் மற்றும் பிரமுகர்கள் வரிசையில் நின்று ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர். இந்த சூழலில், சித்தூர், கடப்பா உள்ளிட்ட சில பகுதிகளில் இரு வேறு கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின் விளைவாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

ஆந்திர பிரதேசத்தில் ஆளும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் ஆகிய இரு கட்சிகள் அதிக செல்வாக்கு கொண்டுள்ளன. இவ்விரு கட்சி தொண்டர்கள் இடையே தேர்தல் முறைகேடு தொடர்பாக வாக்குவாதம் எழுந்தது. வாக்குவாதம் முற்றி மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் வாக்குச்சாவடியில் இருந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் அடித்து உடைக்கப்பட்டன. வாக்குச்சாவடிகளில் பதற்ற சூழல் அதிகரிக்கவே, காவல் துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, பல்வேறு வாக்குச்சாவடிகளில் பதற்ற சூழல் அதிகரித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu