வாயேஜர் 1 பொருத்தம் இல்லாத முரணான செய்திகளை அளிக்கிறது - நாசா

நாசாவின் வாயேஜர் 1 விண்கலம், பொருத்தமில்லாத மற்றும் முரணான செய்திகளை வழங்கி வருவதாக நாசா அறிவித்துள்ளது. மனிதனால் உருவாக்கப்பட்டு பிரபஞ்சத்தில் அதிக தொலைவு சென்றுள்ள விண்கலம் வாயேஜர் 1 ஆகும். வெறும் நான்காண்டுகளுக்கு செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த விண்கலம், 35 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறது. மேலும், விண்வெளி துறையில் அளப்பரிய கண்டுபிடிப்புகளை முன்னெடுத்து சென்றுள்ளது. அண்மைக்காலமாக, இந்த விண்கலத்தை தொடர்பு கொள்வதில் சிக்கல் நீடித்து வருகிறது. இந்த நிலையில், 24 பில்லியன் கிலோ மீட்டருக்கும் அப்பால் […]

நாசாவின் வாயேஜர் 1 விண்கலம், பொருத்தமில்லாத மற்றும் முரணான செய்திகளை வழங்கி வருவதாக நாசா அறிவித்துள்ளது.

மனிதனால் உருவாக்கப்பட்டு பிரபஞ்சத்தில் அதிக தொலைவு சென்றுள்ள விண்கலம் வாயேஜர் 1 ஆகும். வெறும் நான்காண்டுகளுக்கு செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த விண்கலம், 35 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறது. மேலும், விண்வெளி துறையில் அளப்பரிய கண்டுபிடிப்புகளை முன்னெடுத்து சென்றுள்ளது. அண்மைக்காலமாக, இந்த விண்கலத்தை தொடர்பு கொள்வதில் சிக்கல் நீடித்து வருகிறது. இந்த நிலையில், 24 பில்லியன் கிலோ மீட்டருக்கும் அப்பால் உள்ள இந்த விண்கலத்திலிருந்து பொருத்தம் இல்லாத மற்றும் முரணான செய்திகள் கிடைத்து வருவதாக நாசா தெரிவித்துள்ளது. வாயேஜர் 1 விண்கலத்தை கட்டுப்பாடு செய்யும் குழுவினரின் இயக்குனர் சூசன் டாட், “வாயேஜர் 1 இப்போதும் எங்களுடன் உரையாடி வருகிறது. ஆனால், பொருத்தமற்ற வகையில் பேசுகிறது” என்று கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu