நாசாவின் வாயேஜர் விண்கலம் பூமியிலிருந்து 15 பில்லியன் கிலோமீட்டர் தொலைவில் பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்த விண்கலத்தை தொடர்பு கொள்வதில் கடந்த டிசம்பர் மாதம் சிக்கல் ஏற்பட்டது. அப்போது, தொடர்பு துண்டிக்கப்பட்டதாக நினைத்த நிலையில், மீண்டும் தொடர்பு கிடைத்தது. ஆனால், விண்கலத்துக்கு அனுப்பப்படும் தகவல்கள் மற்றும் விண்கலத்திலிருந்து பூமிக்கு கிடைக்கும் தகவல்கள் ஆகியவற்றில் மிகப்பெரிய தாமதம் நீடித்து வருவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இந்த சிக்கலுக்கு தீர்வு காணும் முயற்சியில் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக நாசா தெரிவித்துள்ளது.
கடந்த 1977 ஆம் ஆண்டு, வாயேஜர் 1 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. தொடக்கத்தில், 5 ஆண்டு கால திட்டமாக அறிவிக்கப்பட்ட இது, 46 ஆண்டுகள் தொடர்ந்து வருகிறது. சூரிய குடும்பத்தை தாண்டி பயணித்த முதல் விண்கலமாக இது உள்ளது. வரும் 2030 ஆம் ஆண்டு வரையில் வாயேஜர் 1 செயல்பாட்டில் இருக்கும் என கருதப்படுகிறது.