தமிழ்நாட்டில் 4400 கோடி மதிப்பிலான கடல் நீர் சுத்திகரிப்பு திட்டம் - WABAG நிறுவனம் கையகப்படுத்தியது

March 31, 2023

பிரபல நீர் சுத்திகரிப்பு நிறுவனமான WABAG, தமிழ்நாட்டில் கடல் நீர் சுத்திகரிப்பு திட்டத்தில் ஒப்பந்தமாகி உள்ளது. 4400 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டம், முழுமையாக நிறைவடைந்த பிறகு, தென்கிழக்கு ஆசியா பகுதியில் மிகப்பெரிய கடல் நீர் சுத்திகரிப்பு நிலையமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம், சென்னையை சேர்ந்த மேட்டிட்டோ ஓவர்சீஸ் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து கூட்டு முயற்சியில் நடைபெற உள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, நாள் ஒன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் நீர் சுத்திகரிக்கப்பட உள்ளது. […]

பிரபல நீர் சுத்திகரிப்பு நிறுவனமான WABAG, தமிழ்நாட்டில் கடல் நீர் சுத்திகரிப்பு திட்டத்தில் ஒப்பந்தமாகி உள்ளது. 4400 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டம், முழுமையாக நிறைவடைந்த பிறகு, தென்கிழக்கு ஆசியா பகுதியில் மிகப்பெரிய கடல் நீர் சுத்திகரிப்பு நிலையமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம், சென்னையை சேர்ந்த மேட்டிட்டோ ஓவர்சீஸ் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து கூட்டு முயற்சியில் நடைபெற உள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி, நாள் ஒன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் நீர் சுத்திகரிக்கப்பட உள்ளது. மேலும், முதல் 42 மாத காலத்திற்கான இயக்கம், அதைத்தொடர்ந்து 20 வருடங்களுக்கு செயல்முறைகள் மற்றும் பராமரிப்புக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு, ஜப்பான் இன்டர்நேஷனல் கோ-ஆபரேஷன் ஏஜென்சி நிதி வழங்கியுள்ளது. மேலும், இந்த திட்டத்தின் மூலம், சென்னை நகருக்கு குடிநீர் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu