ஹிஜ்புல்லாவின் பயங்கரவாத இலக்குகள் மற்றும் உட்கட்டமைப்புகள் மீது இஸ்ரேலின் போர் தொடங்கியுள்ளது.
இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி யோவா கேலண்ட், ஹிஜ்புல்லாவின் பயங்கரவாத இலக்குகள் மற்றும் உட்கட்டமைப்புகள் மீது இஸ்ரேலின் போர் தொடங்கியுள்ளதாக எக்ஸ் ஊடகத்தில் தெரிவித்தார். அவர், நாங்கள் போரின் புதிய கட்டத்தை தொடங்கியுள்ளோம் என கூறியிருக்கிறார். வடக்கு பகுதியின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், வளங்களும் படைகளும் அங்கு ஒதுக்கப்பட்டுள்ளது. லெபனானில் ஹிஜ்புல்லாவின் திறன்களை குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஹிஜ்புல்லா பொதுமக்களின் வீடுகளை ஆயுதங்கள் பதுக்கி வைக்கும் இடங்களாக மாற்றியுள்ளனர் என்று இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. இஸ்ரேல், தெற்கு லெபனானை போர் மண்டலமாக மாற்றியுள்ள ஹிஜ்புல்லாவுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கத் திட்டமிட்டுள்ளது. போர் இலக்குகளை அடைய எங்களுடைய நடவடிக்கைகள் தொடரும் எனவும் கேலண்ட் தெரிவித்தார்.