1 ட்ரில்லியன் டாலர் சந்தை மதிப்பை தாண்டிய முதல் தொழில்நுட்பம் சாரா அமெரிக்க நிறுவனம்

August 29, 2024

வாரன் பஃபெட்டின் தலைமையிலான பெர்க்ஷயர் ஹாதவே நிறுவனம், சந்தை மூலதனத்தில் 1 டிரில்லியன் அமெரிக்க டாலரைத் தாண்டிய அமெரிக்காவின் முதல் தொழில்நுட்பம் சாரா நிறுவனமாக வரலாறு படைத்துள்ளது. நியூயார்க் பங்குச் சந்தையில், பெர்க்ஷயர் ஹாதவே பங்கு 3.96 அமெரிக்க டாலர்கள் உயர்ந்து, 464.59 அமெரிக்க டாலர்களாக உள்ளது. அதன்படி, ஆப்பிள், என்விடியா மற்றும் மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த, முக்கியமான, 1 டிரில்லியன் டாலர் நிறுவனங்களின் பிரத்தியேக குழுவில் பெர்க்ஷயர் ஹாதவே இணைகிறது. இந்த ஆண்டு, […]

வாரன் பஃபெட்டின் தலைமையிலான பெர்க்ஷயர் ஹாதவே நிறுவனம், சந்தை மூலதனத்தில் 1 டிரில்லியன் அமெரிக்க டாலரைத் தாண்டிய அமெரிக்காவின் முதல் தொழில்நுட்பம் சாரா நிறுவனமாக வரலாறு படைத்துள்ளது.

நியூயார்க் பங்குச் சந்தையில், பெர்க்ஷயர் ஹாதவே பங்கு 3.96 அமெரிக்க டாலர்கள் உயர்ந்து, 464.59 அமெரிக்க டாலர்களாக உள்ளது. அதன்படி, ஆப்பிள், என்விடியா மற்றும் மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த, முக்கியமான, 1 டிரில்லியன் டாலர் நிறுவனங்களின் பிரத்தியேக குழுவில் பெர்க்ஷயர் ஹாதவே இணைகிறது. இந்த ஆண்டு, பெர்க்ஷயர் ஹாதவே நிறுவனத்தின் பங்குகள் 28%க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதன் மூலம், நிறுவனத்தின் சந்தை செயல் திறனில் குறிப்பிடத்தக்க மைல்கல் எட்டப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu