பேங்க் ஆப் அமெரிக்கா பங்குகளை விற்கும் வாரன் பஃபெட்டின் பெர்க்ஷயர்

September 6, 2024

வாரன் பஃபெட்டின் பெர்க்ஷயர் ஹாத்வே, ஜூலையிலிருந்து பேங்க் ஆப் அமெரிக்கா பங்குகளை தொடர்ச்சியாக விற்று வருகிறது. செப்டம்பர் தொடக்கத்தில் மட்டும் $760 மில்லியன் மதிப்புள்ள பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மொத்த மதிப்பு $6.97 பில்லியனை எட்டியுள்ளது. ஆனாலும், பேங்க் ஆப் அமெரிக்காவின் மிகப்பெரிய பங்குதாரராக பெர்க்ஷயர் நீடிக்கிறது. பேங்க் ஆப் அமெரிக்கா வங்கியின் மொத்த பங்குகளில் 11% பெர்க்ஷயரிடம் உள்ளது. இதன் மதிப்பு 34.7 பில்லியன் டாலராகும். இந்த நிலையில், பெர்க்ஷயர் தனது பங்கு விற்பனையை […]

வாரன் பஃபெட்டின் பெர்க்ஷயர் ஹாத்வே, ஜூலையிலிருந்து பேங்க் ஆப் அமெரிக்கா பங்குகளை தொடர்ச்சியாக விற்று வருகிறது. செப்டம்பர் தொடக்கத்தில் மட்டும் $760 மில்லியன் மதிப்புள்ள பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மொத்த மதிப்பு $6.97 பில்லியனை எட்டியுள்ளது. ஆனாலும், பேங்க் ஆப் அமெரிக்காவின் மிகப்பெரிய பங்குதாரராக பெர்க்ஷயர் நீடிக்கிறது.

பேங்க் ஆப் அமெரிக்கா வங்கியின் மொத்த பங்குகளில் 11% பெர்க்ஷயரிடம் உள்ளது. இதன் மதிப்பு 34.7 பில்லியன் டாலராகும். இந்த நிலையில், பெர்க்ஷயர் தனது பங்கு விற்பனையை தொடர்ந்தால், வங்கியில் உள்ள அதன் பங்கு 10% க்கும் கீழ் குறையலாம். இது உடனடி பரிவர்த்தனை வெளிப்படுத்தல்களின் தேவையைக் குறைக்கும். பஃபெட் ஏன் தனது பேங்க் ஆப் அமெரிக்கா பங்குகளை குறைக்கிறார் என்பது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வமான விளக்கமும் வெளியாகவில்லை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu