மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் மற்றும் நடிகரான கமல்ஹாசன் வயநாட்டில் பாதிக்கபட்ட மக்களுக்காக ரூ.25 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார்.
மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதியை அறிவித்துள்ளார். இயற்கைப் பேரிடரால் துயர நிலையில் உள்ள மக்களுக்கு உடனடி நிவாரணம் அளிக்கும் நோக்கில் இந்த நிதி உதவி வழங்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். அதன்படி கேரள முதல் மந்திரி பேரிடர் நிவாரண நிதிக்கு நிதி வழங்கியுள்ளார். மேலும் இதற்கு முன்னதாக நடிகர் சூர்யா,கார்த்தி மற்றும் நடிகை ஜோதிகா 50 லட்சமும்,நடிகர் விக்ரம் 20 லட்சமும் நிதி வழங்கியுள்ளனர்.