கேரளாவில் வாட்டர் மெட்ரோ படகு போக்குவரத்துக்கு வரவேற்பு

கேரளாவில் புதிதாக துவக்கப்பட்ட கொச்சி வாட்டர் மெட்ரோ படகு போக்குவரத்து அமோக வரவேற்பு பெற்றுள்ளது. கேரளாவில் கொச்சியில் 10 தீவுகளை ஒன்றிணைக்கும் வகையில் வாட்டர் மெட்ரோ படகு சேவையை சில நாட்களுக்கு முன் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஒவ்வொரு தீவிலும் மெட்ரோ ரயில் நிலையங்களை போலவே படகுகள் வந்துசெல்ல 38 முனையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இயக்கப்பட்டு வரும் 8 எலக்ட்ரிக் ஹைப்ரீட் படகுகளில் தலா ஒருவருக்கு 20 முதல் 40 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒவ்வொரு படகிலும் […]

கேரளாவில் புதிதாக துவக்கப்பட்ட கொச்சி வாட்டர் மெட்ரோ படகு போக்குவரத்து அமோக வரவேற்பு பெற்றுள்ளது.

கேரளாவில் கொச்சியில் 10 தீவுகளை ஒன்றிணைக்கும் வகையில் வாட்டர் மெட்ரோ படகு சேவையை சில நாட்களுக்கு முன் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஒவ்வொரு தீவிலும் மெட்ரோ ரயில் நிலையங்களை போலவே படகுகள் வந்துசெல்ல 38 முனையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இயக்கப்பட்டு வரும் 8 எலக்ட்ரிக் ஹைப்ரீட் படகுகளில் தலா ஒருவருக்கு 20 முதல் 40 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒவ்வொரு படகிலும் கிட்டத்தட்ட 100 பேர் பயணித்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள படகுகளில் கடந்த 7 நாட்களில் மட்டும் சுமார் 50,000 பேர் பயணம் செய்துள்ளனர். வாட்டர் மெட்ரோ படகு சேவை திட்டம் அடுத்தாண்டு முழுமையாக பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu