அமெரிக்காவில் மேற்கு வங்க நடனக் கலைஞர் சுட்டுக்கொலை

March 4, 2024

மேற்கு வங்கத்தை சேர்ந்த அமர்நாத் கோஷ் என்ற நடன கலைஞர் அமெரிக்காவில் முனைவர் பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி, அவர் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள மிசௌரி மாகாணத்தில் நடைபெற்ற இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக இந்திய துணை தூதரகம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் 1ஆம் தேதி, மும்பையைச் சேர்ந்த பிரபல நடிகர் தேவோலீனா பட்டாசார்ஜி, பரதநாட்டியம் மற்றும் குச்சிப்புடி நடனக் […]

மேற்கு வங்கத்தை சேர்ந்த அமர்நாத் கோஷ் என்ற நடன கலைஞர் அமெரிக்காவில் முனைவர் பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி, அவர் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள மிசௌரி மாகாணத்தில் நடைபெற்ற இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக இந்திய துணை தூதரகம் தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் 1ஆம் தேதி, மும்பையைச் சேர்ந்த பிரபல நடிகர் தேவோலீனா பட்டாசார்ஜி, பரதநாட்டியம் மற்றும் குச்சிப்புடி நடனக் கலைஞரான அமர்நாத் கோஷ் தனது நண்பர் என்று குறிப்பிட்டு, அவர் அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்டதை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார். அதன் பிறகு இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. தற்போது, இது குறித்து இந்திய துணை தூதரகம் விசாரணை மேற்கொண்டு வருவதாக அறிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu