வாட்ஸ் அப் செயலியில் ஒரு நிமிடம் அளவில் ஓடக்கூடிய வீடியோக்களை ஸ்டேட்டஸ் வைக்கும் புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில், 30 வினாடிகள் ஓடக்கூடிய வீடியோக்களை வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் வைக்க முடியும். தற்போது வீடியோக்களின் நீளத்தை ஒரு நிமிடம் வரை அதிகரித்துள்ளதாக வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது. வாட்ஸ் அப் மேம்படுத்தல் விவரங்களை வெளியிடும் WABetaInfo தளத்தில் இது பற்றிய விரிவான குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. தற்போதைய நிலையில், பீட்டா பயனர்களுக்கு இந்த அம்சம் வெளியாகியுள்ளது. வரும் வாரங்களில் இது அனைத்து பயனர்களுக்கும் வெளியிடப்பட உள்ளது. பயனர்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர, க்யூ ஆர் கோடு கட்டண முறையை கொண்டு வர வாட்ஸ் அப் பணியாற்றி வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.