வாட்ஸ் அப் நிறுவனம்
ஆனது வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை எளிமையான முறையில் வழங்க, ரேஸர் பே, பே யூ போன்ற நிறுவனங்களுடன் கூட்டணியில் இணைய உள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி, வர்த்தக கட்டணங்களை கார்டு,யுபிஐ போன்றவற்றின் மூலம் வாட்ஸ் அப் வாயிலாக செலுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வாட்ஸ் அப் சாட் மூலமாகவே இந்தியர்கள் இனிமேல் பொருட்களை வாங்க முடியும் எனவும், அதற்கான கட்டணத்தை மிகவும் எளிமையாக வாட்ஸ் அப் மூலமாகவே செலுத்த முடியும் எனவும் வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது.
இந்த இணைய வழி கட்டண முறை இன்று முதல் இந்திய வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது. மேலும், வர்த்தக நிறுவனங்களுக்கு வசதியாக Flows என்ற புதிய அம்சத்தை வெளியிட்டுள்ளது. இதன் மூலம், தங்கள் வர்த்தகத்துக்கு ஏற்றவாறு, சாட் விண்டோவிலேயே பல்வேறு அம்சங்களை வர்த்தக நிறுவனங்கள் வைத்துக் கொள்ள முடியும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. அத்துடன் இந்தியாவின் இணைய வழி வர்த்தகத்தில் இது முக்கிய திருப்புமுனையாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.