பெயர் இல்லாமல் வாட்ஸ் அப் குழு தொடங்கலாம் - புதிய அம்சம் அறிமுகம்

இனிமேல், பெயர் இல்லாமலேயே வாட்ஸ் அப் குழுக்களை தொடங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அம்சம் விரைவில் வெளிவர உள்ளதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர் வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், பல்வேறு புதிய அம்சங்களை வாட்ஸ் அப் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், வாட்ஸ் அப் குழுக்களுக்கு கட்டாயமாக தலைப்பு கொடுக்க வேண்டாம் என்ற அம்சம் வெளியிடப்படுகிறது. அதன்படி, பெயர் இல்லாமல் உருவாக்கப்படும் வாட்ஸ் அப் குழுக்களுக்கு, தலைப்புக்கு பதிலாக உறுப்பினர்களின் பெயர்கள் மட்டுமே காட்சிப்படுத்தப்படும். […]

இனிமேல், பெயர் இல்லாமலேயே வாட்ஸ் அப் குழுக்களை தொடங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அம்சம் விரைவில் வெளிவர உள்ளதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர் வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், பல்வேறு புதிய அம்சங்களை வாட்ஸ் அப் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், வாட்ஸ் அப் குழுக்களுக்கு கட்டாயமாக தலைப்பு கொடுக்க வேண்டாம் என்ற அம்சம் வெளியிடப்படுகிறது. அதன்படி, பெயர் இல்லாமல் உருவாக்கப்படும் வாட்ஸ் அப் குழுக்களுக்கு, தலைப்புக்கு பதிலாக உறுப்பினர்களின் பெயர்கள் மட்டுமே காட்சிப்படுத்தப்படும். ஆனால், பெயர் குறிப்பிடாத வாட்ஸ் அப் குழுவில் அதிகபட்சமாக 6 பேர் மட்டுமே இணைய முடியும் என கூறப்பட்டுள்ளது. இந்த அம்சத்தின் மூலம், குறுகிய காலத்திற்கோ அல்லது அவசரமாகவோ வாட்ஸ் அப் குழு உருவாக்கும் பயனர்கள் மிகுந்த பயனடைவார்கள் என கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu