வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பும் புதிய அம்சத்தை அறிமுகம் செய்த வாட்ஸ் அப்

வாட்ஸ் அப் செயலி மூலம் வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பும் புதிய அம்சம் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்திய பயனர்களுக்கு சர்வதேச யுபிஐ பரிவர்த்தனைகளை வழங்கும் வசதியை வாட்ஸ் அப் கொண்டு வந்துள்ளது. யுபிஐ செட்டிங்ஸ் பிரிவில் இன்டர்நேஷனல் பேமெண்ட்ஸ் என்ற புதிய ஆப்ஷன் இதற்காக கொடுக்கப்படுகிறது. இதனை ஆக்டிவேட் செய்து, எவ்வளவு காலத்திற்கு செயல்பாடுகளை நீடிக்க வேண்டும் என்பதையும் பயனர்கள் குறிப்பிட வேண்டும். இது தொடர்பான ஸ்கிரீன் ஷாட் விவரங்கள் வெளியாகி உள்ளன. தற்போதைய நிலவரப்படி, பீட்டா பயனர்களுக்கு […]

வாட்ஸ் அப் செயலி மூலம் வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பும் புதிய அம்சம் அறிமுகம் செய்யப்படுகிறது.

இந்திய பயனர்களுக்கு சர்வதேச யுபிஐ பரிவர்த்தனைகளை வழங்கும் வசதியை வாட்ஸ் அப் கொண்டு வந்துள்ளது. யுபிஐ செட்டிங்ஸ் பிரிவில் இன்டர்நேஷனல் பேமெண்ட்ஸ் என்ற புதிய ஆப்ஷன் இதற்காக கொடுக்கப்படுகிறது. இதனை ஆக்டிவேட் செய்து, எவ்வளவு காலத்திற்கு செயல்பாடுகளை நீடிக்க வேண்டும் என்பதையும் பயனர்கள் குறிப்பிட வேண்டும். இது தொடர்பான ஸ்கிரீன் ஷாட் விவரங்கள் வெளியாகி உள்ளன. தற்போதைய நிலவரப்படி, பீட்டா பயனர்களுக்கு மட்டும் இந்த சேவை கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து தரப்பு மக்களுக்கும் இது வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை, வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பும் சேவைகளை போன் பே, கூகுள் பே போன்ற செயலிகள் ஏற்கனவே வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu