2023 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம், நாளை - மே 05 ஆம் தேதி நடைபெற உள்ளது. நாளை சித்ரா பௌர்ணமி தினம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சந்திர கிரகணம் பகுதி சந்திர கிரகணமாக நிகழ உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, அண்டார்டிகா ஆகிய 5 கண்டங்களில் இந்த பகுதி சந்திர கிரகணம் தெரியும் என சொல்லப்பட்டுள்ளது. அத்துடன், இந்திய பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் கிரகணத்தை தெளிவாக பார்க்க முடியும் என கூறப்பட்டுள்ளது.
சித்ரா பௌர்ணமி தினமான நாளை, உலக நேரப்படி மாலை 3:14 மணிக்கு தொடங்கி, இரவு 7:31 மணி வரை கிரகணம் நிகழும் என சொல்லப்பட்டுள்ளது. இது, இந்திய நேரப்படி, இரவு 8:44 மணிக்கு தொடங்கி மே 6ஆம் தேதி அதிகாலை 01:01 வரை ஆகும். மேலும், சந்திர கிரகணத்தின் உச்ச நிகழ்வு இரவு 10:52 மணிக்கு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.