5ஜி தொழில்நுட்பத்தை கையாளும் திறன் கொண்ட கைபேசிகளின் பட்டியல் - ஏர்டெல் நிறுவனம் வெளியீடு

October 12, 2022

கடந்த அக்டோபர் 1ம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவில் 5ஜி தொழில்நுட்ப சேவையை தொடங்கி வைத்தார். அதன் பின்னர், பொதுமக்களுக்கு எந்தெந்த கைபேசியில் 5ஜி தொழில்நுட்ப சேவையை பயன்படுத்த முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அது குறித்த தகவல்களை அறிய, இந்திய மக்கள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே, மக்களின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் விதமாக, பார்தி ஏர்டெல் நிறுவனம், ஏர்டெல் நெட்வொர்க்கின் 5ஜி தொழில்நுட்பத்தை கையாளும் திறன் கொண்ட கைபேசிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. […]

கடந்த அக்டோபர் 1ம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவில் 5ஜி தொழில்நுட்ப சேவையை தொடங்கி வைத்தார். அதன் பின்னர், பொதுமக்களுக்கு எந்தெந்த கைபேசியில் 5ஜி தொழில்நுட்ப சேவையை பயன்படுத்த முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அது குறித்த தகவல்களை அறிய, இந்திய மக்கள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே, மக்களின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் விதமாக, பார்தி ஏர்டெல் நிறுவனம், ஏர்டெல் நெட்வொர்க்கின் 5ஜி தொழில்நுட்பத்தை கையாளும் திறன் கொண்ட கைபேசிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

ரியல் மி, ஜியோமி, ஓப்போ, விவோ, ஆப்பிள், ஒன் பிளஸ், சாம்சங் போன்ற பல கைபேசி நிறுவனங்களின், 116 மாடல்கள், ஏர்டெல் 5ஜி தொழில்நுட்ப சேவையை கையாள வல்லது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன், சில கைப்பேசிகளில் சாப்ட்வேர் அப்டேட் செய்வதன் மூலம், 5ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடியும் என்று ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை பின்வரும் வலைப் பக்கத்தில் ஏர்டெல் குறிப்பிட்டுள்ளது.

வலைப்பக்க முகவரி: https://www.airtel.in/airtel-5g-handsets

பார்தி ஏர்டெல் நிறுவனம், டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், சிலிகுரி, நாக்பூர், வாரணாசி ஆகிய 8 நகரங்களில், 5ஜி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்குப் போட்டியாக, வரும் தீபாவளி முதல், இந்தியாவில் 5ஜி சேவையைத் தொடங்க உள்ளதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில் 5ஜி தொழில்நுட்பத்தை கையாளும் திறன் கொண்ட கைபேசிகளின் பட்டியல் வெளியிடப்பட்டிருப்பது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu