விப்ரோ நிறுவனத்தில், ஐரோப்பிய பணியாளர்கள் தொழிற்சங்கம் அமைத்துக் கொள்ள அனுமதி

November 25, 2022

விப்ரோ நிறுவனம், ஐரோப்பாவில் பணி செய்யும் பணியாளர்கள் தொழிற்சங்கம் அமைத்துக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம், ஐரோப்பாவில், தொழிற்சங்கம் அமைக்க அனுமதி வழங்கிய முதல் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக விப்ரோ மாறி உள்ளது. விப்ரோ நிறுவனத்தில், 13 ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 30000 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருவதாக சொல்லப்படுகிறது. எனவே, அவர்களுக்கான தொழிற்சங்கம், ஐரோப்பிய பணியாளர்களை பாதிக்கும் பிரச்சினைகள் மற்றும் பணிகள் குறித்த விவாதங்களை மேற்கொள்ளும் என கருதப்படுகிறது. மேலும், அனைத்து […]

விப்ரோ நிறுவனம், ஐரோப்பாவில் பணி செய்யும் பணியாளர்கள் தொழிற்சங்கம் அமைத்துக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம், ஐரோப்பாவில், தொழிற்சங்கம் அமைக்க அனுமதி வழங்கிய முதல் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக விப்ரோ மாறி உள்ளது.

விப்ரோ நிறுவனத்தில், 13 ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 30000 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருவதாக சொல்லப்படுகிறது. எனவே, அவர்களுக்கான தொழிற்சங்கம், ஐரோப்பிய பணியாளர்களை பாதிக்கும் பிரச்சினைகள் மற்றும் பணிகள் குறித்த விவாதங்களை மேற்கொள்ளும் என கருதப்படுகிறது. மேலும், அனைத்து நாட்டு பணியாளர்களுடன் இணக்கமான உறவை நீட்டித்துக் கொள்வது, நாடு கடந்த முறையில் பணியாளர் நலன் சார்ந்த விவாதங்களில் ஈடுபடுவது ஆகியவை இந்த தொழிற்சங்கத்தின் முக்கிய நோக்கமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஐரோப்பிய யூனியன் மற்றும் ஐரோப்பிய பொருளாதாரப் பகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதி மூலம் இந்த சங்கம் வழிநடத்தப்படும் என்று விப்ரோ தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu