விப்ரோ தலைமை நிதி அதிகாரி திடீர் விலகல் - விப்ரோ பங்குகள் சரிவு

September 22, 2023

விப்ரோ நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ஜட்டின் தலால் திடீரென பதவி விலகி உள்ளார். இந்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து, விப்ரோ நிறுவனத்தின் பங்குகள் சரிந்து வர்த்தகமாகி வருகின்றன. ஜட்டின் தலால், விப்ரோ நிறுவனத்தின் மூத்த உயர் அதிகாரி ஆவார். ஏற்கனவே, சஞ்சீவ் சிங் உள்ளிட்ட விப்ரோ நிறுவனத்தின் உயரதிகாரிகள் தொடர்ச்சியாக வெளியேறி வரும் நிலையில், இவரது திடீர் விலகல் விப்ரோ நிறுவனத்துக்கு மேலும் சரிவாக அமைந்துள்ளது. இன்றைய காலை நேர வர்த்தகத்தில், கிட்டத்தட்ட 3% வரை […]

விப்ரோ நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ஜட்டின் தலால் திடீரென பதவி விலகி உள்ளார். இந்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து, விப்ரோ நிறுவனத்தின் பங்குகள் சரிந்து வர்த்தகமாகி வருகின்றன.

ஜட்டின் தலால், விப்ரோ நிறுவனத்தின் மூத்த உயர் அதிகாரி ஆவார். ஏற்கனவே, சஞ்சீவ் சிங் உள்ளிட்ட விப்ரோ நிறுவனத்தின் உயரதிகாரிகள் தொடர்ச்சியாக வெளியேறி வரும் நிலையில், இவரது திடீர் விலகல் விப்ரோ நிறுவனத்துக்கு மேலும் சரிவாக அமைந்துள்ளது. இன்றைய காலை நேர வர்த்தகத்தில், கிட்டத்தட்ட 3% வரை விப்ரோ பங்குகள் சரிந்து வர்த்தகமாயின. ஜட்டின் தலால் விலகிய பின்னர், அபர்ணா ஐயர் புதிய தலைமை நிதி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu