வருகிற ஜூன் 7ம் தேதியுடன் தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ்

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஜூன் 6-ம் தேதி வரை அமலில் இருக்கும் பின்னர் அது திரும்ப பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 16 ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. அன்றைய தினத்தில் இருந்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தன. பின்னர் இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அளித்த […]

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஜூன் 6-ம் தேதி வரை அமலில் இருக்கும் பின்னர் அது திரும்ப பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 16 ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. அன்றைய தினத்தில் இருந்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தன. பின்னர் இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அளித்த பேட்டியில் வாக்கு எண்ணிக்கையின் போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதடைந்ததாகவோ, வேறு காரணங்களுக்காகவும் அரசியல் கட்சிகளிடமிருந்து எவ்வித புகார்களும் எழவில்லை. மேலும் தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை மிக அமைதியாக நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் அனைத்தும் இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். பின்னர் மத்தியில் புதிய அரசு ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகள் தொடங்கப்படும். மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஜூன் 6-ம் தேதி வரை அமலில் இருக்கும் பின்னர் திரும்பப் பெறப்படும் என தெரிவித்துள்ளார்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu