தமிழகத்தில் மூன்று பெண்கள் முதல் முறையாக அர்ச்சகர்கள் ஆகியுள்ளனர்.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின் படி தமிழகத்தில் திருவண்ணாமலை, பழனி, திருச்செந்தூர்,மதுரை,ஸ்ரீரங்கம், சென்னை ஆகிய இடங்களில் பயிற்சி பள்ளிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் சேர்ந்த பின் ஒரு ஆண்டு ஆகம பூஜை உள்ளிட்ட அனைத்து பயிற்சிகளும் அளிக்கப்படும். இதில் இந்த ஆண்டு 94 பேர் பயிற்சியில் சேர்ந்தனர். அதில் மூன்று பேர் பெண்கள். இவர்கள் ஒரு வருடம் பயிற்சி முடித்துள்ளனர். பின்னர் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மூன்று பெண்கள் உட்பட 94 பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கோவில்களில் ஆண், பெண் என்ற பாகுபாடு இருக்கக்கூடாது என்ற அடிப்படையில் பெண்களும் சேர்த்துக் கொள்ளப்படுவதாக அறநிலையத்துறை அறிவித்துள்ளது. தற்போது மூன்று பெண்களும் திருச்சியில் ஸ்ரீரங்கம் கோவிலில் உதவி அர்ச்சகராக பயிற்சி பெறுவார்கள். இவரகள் தேவைப்படும் கோவில்களில் நியமிக்கப்படுவார்கள் என அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.