இங்கிலாந்தின் முதல் பெண் நிதி அமைச்சர் ஆனார் ரேச்சல் ரீவ்ஸ்

July 8, 2024

இங்கிலாந்து வரலாற்றில் முதல் முறையாக நிதி அமைச்சர் பதவிக்கு பெண்மணி ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து நாட்டில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி 408 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இந்த நிலையில், முதல் முறையாக நாட்டின் நிதி அமைச்சர் பதவிக்கு ரேச்சல் ரீவ்ஸ் என்ற 45 வயது பெண் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் தவிர, துணை பிரதமர் பதவிக்கு ஏஞ்சலா ரெய்னர் என்ற பெண் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து வரலாற்றில் முதல் பெண் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள […]

இங்கிலாந்து வரலாற்றில் முதல் முறையாக நிதி அமைச்சர் பதவிக்கு பெண்மணி ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து நாட்டில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி 408 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இந்த நிலையில், முதல் முறையாக நாட்டின் நிதி அமைச்சர் பதவிக்கு ரேச்சல் ரீவ்ஸ் என்ற 45 வயது பெண் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் தவிர, துணை பிரதமர் பதவிக்கு ஏஞ்சலா ரெய்னர் என்ற பெண் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து வரலாற்றில் முதல் பெண் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ரேச்சல் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் இது தொடர்பாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும், பிரிட்டன் பொருளாதார வளர்ச்சிக்கு தேவைப்படும் மாற்றத்தை வழங்குவதற்கு தயாராக உள்ளதாகவும், பொறுப்பை உணர்ந்து செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், பெண்களின் லட்சியங்களுக்கு விதிக்கப்படும் வரம்புகளை தகர்த்தெறிவோம் என்று ஊக்கத்துடன் கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu