பெண்கள் பிரீமியர் லீக் தொடரில் டெல்லி அணியை வீழ்த்தி ஆர்சிபி அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
2024 ஆம் ஆண்டு பெண்கள் பிரிமியர் லீக் இறுதி போட்டி நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி - ஆர்.சி. பி அணிகள் மோதினர். போட்டியில் முதலில் விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் 113 ரன்னில் ஆட்டமிழந்தது. அதைத் தொடர்ந்து 114 ரன்கள் அடித்தால் வெற்றி என்னும் இலக்குடன் ஆர்.சி.பி அணி களம் இறங்கியது. இதில் ஆர்.சி.பி அணி 19.3 ஓவரில் இரண்டு விக்கெட் மட்டுமே எடுத்து இலக்கை எட்டியுள்ளது. இதன் மூலம் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் ஆர்.சி.பி அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. கடந்த ஆண்டு தொடங்கிய பெண்கள் பிரிமியர் லீக்கின் இரண்டாவது சீசன் ஆன இதில் ஆர்சிபி அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தி உள்ளது.