மகளிர் இட ஒதுக்கீடு மசோதா- மத்திய அமைச்சரவை ஒப்புதல்

September 19, 2023

பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் 18ம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் 75 ஆண்டுகால பயணம் குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் இந்த கூட்டங்களில் பல மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. பாராளுமன்றத்தில் இன்று இந்த மசோதாவை தாக்கல் செய்ய தீர்மானிக்கபட்டதை […]

பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் 18ம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் 75 ஆண்டுகால பயணம் குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் இந்த கூட்டங்களில் பல மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. பாராளுமன்றத்தில் இன்று இந்த மசோதாவை தாக்கல் செய்ய தீர்மானிக்கபட்டதை அடுத்து மத்திய சட்டத்துறை அமைச்சர் மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதாவிற்கு "நாரி சக்தி வந்தன்" என பெயரிடப்பட்டுள்ளது. இந்த மசோதா நிறைவேறிய பிறகு நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் மறுவரையறை செய்யப்பட்ட பிறகு மசோதா அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu