மகளிர் உரிமை திட்டம்- விண்ணப்பம் சரிபார்க்கும் பணி தொடக்கம்

August 24, 2023

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் சரி பார்க்கும் பணி தொடங்கியுள்ளது. முதலமைச்சர் மு க ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் மகளிர் உரிமை திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் குடும்பத் தலைவிகளுக்கு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதற்கு நாடு முழுவதும் 1 கோடியே 63 லட்சம் பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். இதற்காக தமிழ்நாடு முழுவதும் முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் உண்மையானதா,கொடுக்கப்பட்ட விவரங்கள் அனைத்தும் உண்மையானதா என்பது குறித்து வீடு வீடாக […]

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் சரி பார்க்கும் பணி தொடங்கியுள்ளது.

முதலமைச்சர் மு க ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் மகளிர் உரிமை திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் குடும்பத் தலைவிகளுக்கு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதற்கு நாடு முழுவதும் 1 கோடியே 63 லட்சம் பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். இதற்காக தமிழ்நாடு முழுவதும் முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் உண்மையானதா,கொடுக்கப்பட்ட விவரங்கள் அனைத்தும் உண்மையானதா என்பது குறித்து வீடு வீடாக சென்று கள ஆய்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது. இதில் தன்னார்வர்கள் கல்வித்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் விண்ணப்பத்தார்களிடம் வீடு சொந்த வீடா? வாடகை வீடா? கார் இருக்கிறதா? வருமானம் எவ்வளவு? மின்சார பயன்பாடு எவ்வளவு? போன்ற விவரங்கள் குறித்து ஆய்வு செய்ய இருக்கின்றனர். இதன் இறுதிப்பட்டியல் தயாரான பின் அதன் மூலம் யார் யாருக்கு மாதம் ஆயிரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu