9-வது ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கோப்பை தொடருக்கான 10 கள நடுவர்கள் மற்றும் 3 போட்டி நடுவர்கள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன
10 அணிகளுக்கிடையிலான 9-வது ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கோப்பை, அக்டோபர் 3 முதல் 20 வரை துபாய் மற்றும் ஷார்ஜாவில் நடைபெற உள்ளது. குரூப் ஏ-யில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் உள்ளன. குரூப் பி-யில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்த தொடருக்கான நடுவர்களின் விவரங்களை சர்வதேச கிரிகெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அறிவித்துள்ளது. இதில், கள நடுவர்கள் லாரன் ஏஜென்பேக் (தென் ஆப்பிரிக்கா), கிம் காட்டன் (நியூசிலாந்து), சாரா தம்பனேவானா (ஜிம்பாப்வே) மற்றும் மற்றவர்கள் உள்ளனர். மொத்தமாக 10 கள நடுவர்கள் மற்றும் 3 போட்டி நடுவர்கள் ஆகிய 13 பேரை ஐ.சி.சி. அறிவித்துள்ளது,