மகளிர் உரிமைத்தொகை விண்ணப்ப சரிபார்ப்பு விரைவில் முடிக்க திட்டம்

September 1, 2023

தமிழகத்தில் கலைஞர் மகளிர் தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் அவை ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக வீடு வீடாக சென்று ஆய்வுப்பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். இவை இன்னும் இரண்டு நாட்களில் முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த பணிகள் அனைத்தையும் 5-ம் தேதிக்குள் செய்து முடித்து தகுதியானவர்களின் பட்டியலை தயாரித்து அனுப்புமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை […]

தமிழகத்தில் கலைஞர் மகளிர் தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் அவை ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக வீடு வீடாக சென்று ஆய்வுப்பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். இவை இன்னும் இரண்டு நாட்களில் முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த பணிகள் அனைத்தையும் 5-ம் தேதிக்குள் செய்து முடித்து தகுதியானவர்களின் பட்டியலை தயாரித்து அனுப்புமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுவரை மொத்தம் ஒரு கோடியே 64 லட்சம் விண்ணப்ப விவரங்கள் அரசால் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஆய்வுக்குப் பிறகு விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதா, நிராகரிக்கப்பட்டதா என்பது குறித்த அறிவிப்பு பொதுமக்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதில் நிராகரிக்கப்படும் விண்ணப்பங்கள் மீண்டும் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu