எம்.பி களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி தீவிரம்

மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிகளுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான பதிவு பணி தொடங்கியுள்ளது. பதினெட்டாவது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்கள் நாடாளுமன்றம் சென்று தங்களுக்கான அடையாள அட்டையை பெற்று வருகின்றனர். இதற்கான பதிவு பணி கடந்த 4ம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் உறுப்பினர்கள் தங்களது பயோமெட்ரிக் பதிவுகளை வழங்க வேண்டும். இதற்கான நடைமுறைகள் அனைத்தும் ஆன்லைனிலேயே நடைபெறுகிறது. மேலும் குடும்ப உறுப்பினர்களை உள்ளடக்கிய சி.ஜி.எச்.எஸ் மருத்துவ பயன்பாட்டிற்கான பதிவும் நடைபெற்று வருகிறது. மேலும் […]

மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிகளுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான பதிவு பணி தொடங்கியுள்ளது.

பதினெட்டாவது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்கள் நாடாளுமன்றம் சென்று தங்களுக்கான அடையாள அட்டையை பெற்று வருகின்றனர். இதற்கான பதிவு பணி கடந்த 4ம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் உறுப்பினர்கள் தங்களது பயோமெட்ரிக் பதிவுகளை வழங்க வேண்டும். இதற்கான நடைமுறைகள் அனைத்தும் ஆன்லைனிலேயே நடைபெறுகிறது. மேலும் குடும்ப உறுப்பினர்களை உள்ளடக்கிய சி.ஜி.எச்.எஸ் மருத்துவ பயன்பாட்டிற்கான பதிவும் நடைபெற்று வருகிறது. மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிக்களில் புது எம்பிக்களுக்கு வீடுகள் ஒதுக்கப்படும் வரை அவர்களின் தற்காலிக தங்குமிடம் ஆக ஜன்பத்தில் உள்ள வெஸ்டர்ன் கோர்ட் விடுதியும், மாநில அரசுகளின் இல்லங்களும் பயன்படுத்தப்பட இருக்கின்றன

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu