ஒடிசா: பேரிடர் கால நடவடிக்கைகளுக்கு 100 மில்லியன் டாலர் கடன் உதவி - உலக வங்கி ஒப்புதல்

March 29, 2023

இந்தியாவில், ஒடிசா மாநிலம் அடிக்கடி இயற்கை பேரிடர்களுக்கு ஆளாகிறது. மேலும், 480 கிலோ மீட்டர் நீளமுடைய ஒடிசா கடற்கரைக்கு சுனாமி ஆபத்தும் உள்ளது. எனவே, பேரிடர் கால நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், முன்னெச்சரிக்கை செயல்களில் ஈடுபடவும் நிதி தேவைப்படுகிறது. அந்த வகையில், 100 மில்லியன் டாலர் கடன் உதவியை உலக வங்கி ஒடிசா மாநிலத்திற்கு வழங்கியுள்ளது. வங்கியின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் இதற்கான ஒப்புதலை தற்போது வழங்கி உள்ளனர். உலக வங்கியின் கடனுக்கு 12.5 ஆண்டுகள் வரை முதிர்வு […]

இந்தியாவில், ஒடிசா மாநிலம் அடிக்கடி இயற்கை பேரிடர்களுக்கு ஆளாகிறது. மேலும், 480 கிலோ மீட்டர் நீளமுடைய ஒடிசா கடற்கரைக்கு சுனாமி ஆபத்தும் உள்ளது. எனவே, பேரிடர் கால நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், முன்னெச்சரிக்கை செயல்களில் ஈடுபடவும் நிதி தேவைப்படுகிறது. அந்த வகையில், 100 மில்லியன் டாலர் கடன் உதவியை உலக வங்கி ஒடிசா மாநிலத்திற்கு வழங்கியுள்ளது. வங்கியின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் இதற்கான ஒப்புதலை தற்போது வழங்கி உள்ளனர்.

உலக வங்கியின் கடனுக்கு 12.5 ஆண்டுகள் வரை முதிர்வு காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அது தவிர, கூடுதலாக 3 ஆண்டுகள் சலுகை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பேரிடர் நடவடிக்கைகள் மட்டுமின்றி, ஒடிசா மாநில ஏழை மக்களின் சமூக நலனுக்கு உதவுவதாக இந்த கடன் தொகை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu