கிராமப்புறத்தில் உள்ள கிட்டதட்ட 2 மில்லியன் வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்கு கர்நாடகா திட்டமிட்டு இருந்தது. இதற்காக, 363 மில்லியன் டாலர்கள் கடன் தொகையை உலக வங்கி அளிக்கவுள்ளது. உலக வங்கியின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகக் குழுவை சேர்ந்தவர்கள் இதற்கான ஒப்புதலை தற்போது வழங்கி உள்ளனர். மேலும், இந்த கடன் தொகைக்கான முதிர்வு காலம் 13.5 வருடங்களாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது தவிர, கூடுதலாக 2 ஆண்டுகள் சலுகை அளிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடகா மாநிலத்தின் 77% பகுதி காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பஞ்சம் மற்றும் வெள்ளங்களால் அடிக்கடி பாதிக்கப்படுகிறது. நிலத்தடி நீர் குறைந்து வருவதும், தண்ணீரின் தரம் குறைந்து வருவதும், இங்கு அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, முறையான குடிநீர் விநியோகத்திற்காக இந்த கடன் வழங்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடன் தொகை, கர்நாடக மகளிர், குடிநீருக்காக நெடுந்தூரம் செல்லும் செல்வதை தடுக்க உதவும் என கூறப்பட்டுள்ளது.