உலக நாடுகளின் அணு ஆயுத செலவு 7.6 லட்சம் கோடி

June 18, 2024

கடந்த 2023 ஆம் ஆண்டில், உலக நாடுகளின் அணு ஆயுத செலவு 7.6 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக அணு ஆயுத ஒழிப்பு கமிட்டி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனால், உலக அளவில் அணு ஆயுதப் போர் தொடர்பான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அணு ஆயுத ஒழிப்பு கமிட்டியின் அறிக்கை படி, உலக நாடுகள் ஒரு நொடிக்கு 2.4 லட்சம் ரூபாயை அணு ஆயுதங்களுக்காக செலவு செய்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் அணு ஆயுத செலவுகள் உயர்ந்து கொண்டே […]

கடந்த 2023 ஆம் ஆண்டில், உலக நாடுகளின் அணு ஆயுத செலவு 7.6 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக அணு ஆயுத ஒழிப்பு கமிட்டி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனால், உலக அளவில் அணு ஆயுதப் போர் தொடர்பான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணு ஆயுத ஒழிப்பு கமிட்டியின் அறிக்கை படி, உலக நாடுகள் ஒரு நொடிக்கு 2.4 லட்சம் ரூபாயை அணு ஆயுதங்களுக்காக செலவு செய்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் அணு ஆயுத செலவுகள் உயர்ந்து கொண்டே வருகிறது. முதன்மையாக, அமெரிக்கா கடந்த ஆண்டு 4 லட்சம் கோடி ரூபாய் தொகையை அணு ஆயுதத்திற்காக செலவு செய்துள்ளது. இது, சீனா, இந்தியா, வட கொரியா, பாகிஸ்தான், ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், இஸ்ரேல் போன்ற மற்ற நாடுகள் செலவிட்ட தொகையை விட கூடுதல் ஆகும். மேலும், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், அமெரிக்காவின் அணு ஆயுத செலவு 80% உயர்ந்துள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, ஒரு லட்சம் கோடி செலவு செய்து சீனா இரண்டாம் இடத்திலும், 70000 கோடி செலவு செய்து ரஷ்யா மற்றும் பிரிட்டன் அடுத்த இடத்திலும் உள்ளன. இந்தியா, கடந்த ஆண்டு 19000 கோடி ரூபாயை அணு ஆயுதத்திற்காக செலவு செய்துள்ளது. பாகிஸ்தான் 7.5 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu