ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் ஜூஸ் விண்கலம் வியாழனை நோக்கி நீண்ட தூர பயணத்தில் ஈடுபட்டுள்ளது. எரிபொருளை மிச்சப்படுத்தும் நோக்கில், விண்கலத்தின் பயணத்தில் புதிய உத்தி கையாளப்படுகிறது அதன்படி, நிலவு மற்றும் பூமி ஆகிய இரண்டின் ஈர்ப்பு விசையையும் பயன்படுத்தி, விண்கலத்தின் வேகம் அதிகரிக்கப்படுகிறது. இதற்காக பூமி மற்றும் நிலவு ஆகியவற்றுக்கு நெருக்கமாக பறக்க உள்ளது. இது போன்ற இரட்டை ஈர்ப்பு விசை பயன்டுத்தும் உத்தி வரலாற்றில் முதல் முறையாக மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.
வியாழன் கோளின் பனிக்கட்டி சூழ்ந்த நிலவுகளில் உயிர்கள் வாழக்கூடிய சூழல் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். எனவே, இந்த நிலவுகளை ஆய்வு செய்வதற்காக ஜூஸ் விண்கலம் வியாழனை நோக்கி பயணிக்கிறது. நீண்ட பயணத்திற்குப் பிறகு, வரும் 2031 ஆம் ஆண்டில் ஜூஸ் விண்கலம் வியாழனை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.