உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024

January 8, 2024

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளனர். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல கோடிகளை பல்வேறு நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளனர். அதில் ரிலையன்ஸ் ஜியோ புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆலையின் மீது 35 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளது. கோத்ரேஜ் நிறுவனம் செங்கல்பட்டில் உற்பத்தி மையம் அமைப்பதற்கு ரூபாய் 515 கோடி முதலீடு செய்துள்ளது. இதன் மூலம் 446 பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. டாட்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் கிருஷ்ணகிரியில் செல்போன் உற்பத்தி மையம் மீது 12,082 […]

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளனர்.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல கோடிகளை பல்வேறு நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளனர். அதில் ரிலையன்ஸ் ஜியோ புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆலையின் மீது 35 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளது. கோத்ரேஜ் நிறுவனம் செங்கல்பட்டில் உற்பத்தி மையம் அமைப்பதற்கு ரூபாய் 515 கோடி முதலீடு செய்துள்ளது. இதன் மூலம் 446 பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. டாட்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் கிருஷ்ணகிரியில் செல்போன் உற்பத்தி மையம் மீது 12,082 கோடி முதலீடு செய்துள்ளது. இதன் மூலம் 40500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். பெகடிரான் நிறுவனம் நுகர்வோர் மின்னணு சாதனங்கள் உற்பத்தி மையம் மீது ரூபாய் 1000 கோடி முதலீடு செய்துள்ளது. இதில் 8000 பேருக்கு வேலை வழங்கப்பட உள்ளது. வே.எஸ்.டபிள்யு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் நெல்லை - தூத்துக்குடி மாவட்டங்களில் ரூபாய் 12000 கோடி முதலீடு செய்துள்ளது. இதில் 6600 பேருக்கு வேலை கிடைக்கும். டி.வி.எஸ் குழுமம் தமிழகம் முழுவதும் திட்டங்களுக்கு ரூபாய் 5000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. இதனால் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். சீன நாட்டின் மிட்சுபிஹி நிறுவனம் கும்மிடிப்பூண்டியில் மோட்டார் தொழிற்சாலை தொடங்க ரூபாய் 200 கோடி முதலீடு செய்துள்ளது. வியட்நாம் நாட்டின் முன்னணி மின் வாகனங்கள் தயாரிப்பு நிறுவனமான வின்பாஸ்ட் தூத்துக்குடியில் தொழிற்சாலை அமைக்கிறது. இதற்காக 16000 கோடி முதலீடு செய்துள்ளது. ஹூண்டாய் காஞ்சிபுரத்தில் பெட்ரோல் மின்சார வாகன கார் பேட்டரி தயாரிப்பு நிறுவனம் தொடங்க ரூபாய் 6000 கோடி முதலீடு செய்துள்ளது. குவால்காம் நிறுவனம் ரூபாய் 177.27 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu