இந்தியாவில் உலக பாரம்பரிய மருத்துவ மையத்தை அமைப்பதற்காக பிரதமர் மோடிக்கு உலக சுகாதார நிறுவனம் நன்றி தெரிவித்துள்ளது.
இந்தியாவில் குஜராத் மாநிலம் ஜாம் நகரில் உலகளாவிய பாரம்பரிய மருத்துவ மையம் அமைக்கப்படுகிறது. இதற்காக கடந்த ஏப்ரல் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த மையத்தை அமைக்க இந்தியா 250 மில்லியன் டாலர் நிதி வழங்குகிறது. இந்த மையத்தை அமைப்பதில் இந்தியா பெரும்பங்கு வகிக்கிறது. இதற்காக 'ஜி-20' உச்சி மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதனோம், பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், உலக பாரம்பரிய மருத்துவ மையத்தை கட்டியெழுப்புவதில் உலக சுகாதார நிறுவனத்துடனான உங்களுடைய ஒத்துழைப்புக்கு நன்றி. நாம் ஒன்றுபட்டு அனைவருக்கும் ஆரோக்கியம் வழங்குவோம் என குறிப்பிட்டுள்ளார்.