முழுக்க முழுக்க மாற்று எரிபொருளான எத்தனால் மூலம் இயக்கப்படும் டொயோட்டா இன்னோவா கார் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி இந்த காரை வெளியிட்டார். இது உலகின் முதல் பிஎஸ் 6 ஹைபிரிட் எத்தனால் டொயோட்டா இன்னோவா என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண் பொருட்களின் குப்பையில் இருந்து எத்தனால் தயாரிக்கப்படுகிறது. இது தவிர, இந்தியாவில் எத்தனால் தயாரிக்கும் பிரத்தியேக மையங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இது முழுக்க முழுக்க புதுப்பிக்கத்தக்க எரி சக்தியாக கருதப்படுகிறது. மேலும், வாகனத்தின் செயல்திறனை மேம்படுத்த, பெட்ரோலை விட சிறந்ததாக எத்தனால் கருதப்படுகிறது. அந்த வகையில், எத்தனால் மூலம் இயக்கப்படும் புதிய டொயோட்டா இன்னோவா எம் பி வி ஹைபிரிட் காரின் வருகை, வாகனச் சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.