மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தான் பெற்ற கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகளை அரசிடம் திருப்பி அளிப்பதாக அறிவித்துள்ளார்.
மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்த பிரிட்ஜ் பூஷன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தொடர்ந்து மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் தொடர் போராட்டத்தை தொடர்ந்து பிரிட்ஜ் பூஷன் பதவி விலகினார். தற்போது இவரின் ஆதரவாளர் சஞ்சய் சிங் மல்யுத்த சம்மேளன தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் மல்யுத்த வீரர்கள் இடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து மல்யுத்த வீரர்கள் சிலர் மத்திய அரசின் விருதுகளை திருப்பி மத்திய அரசிடம் ஒப்படைப்பதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் தான் பெற்ற மேஜர் தயான்ஸந்த் கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகளை மத்திய அரசிடம் திருப்பி ஒப்படைப்பதாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தெரிவித்துள்ளார்.