முதல்முறையாக அரசு பஸ் டிரைவர் பணிக்கான எழுத்துத் தேர்வு

September 20, 2023

தமிழகத்தில் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் டிரைவருடன் கூடிய கண்டக்டர் பணிக்கு 685 காலி பணியிடங்களுக்கான விண்ணப்பம் ஆன்லைன் மூலம் பெறப்பட்டது. தமிழகம் முழுவதும் டிரைவருடன் கூடிய கண்டக்டர் பணிக்கு காலி பணியிடங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு இதுவரை 10,000க்கும் மேற்பட்டோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர். பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் சாலை போக்குவரத்து நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதில் எழுத்து தேர்வு நடத்தி தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவர் பணிக்கு எழுத்து […]

தமிழகத்தில் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் டிரைவருடன் கூடிய கண்டக்டர் பணிக்கு 685 காலி பணியிடங்களுக்கான விண்ணப்பம் ஆன்லைன் மூலம் பெறப்பட்டது.
தமிழகம் முழுவதும் டிரைவருடன் கூடிய கண்டக்டர் பணிக்கு காலி பணியிடங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு இதுவரை 10,000க்கும் மேற்பட்டோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர். பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் சாலை போக்குவரத்து நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதில் எழுத்து தேர்வு நடத்தி தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவர் பணிக்கு எழுத்து தேர்வு நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். சென்னை அண்ணா பல்கலைக்கழகம் எழுத்து தேர்வு 10 மையங்களில் நடக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி அடுத்த மாதம் முதல் வாரத்திற்குள் தேர்வுகள் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu