தமிழ்நாட்டில் உறுதியாகும் கொரோனா மாதிரிகளில் 83 புள்ளி 6 சதவீதம் எக்ஸ்.பி.பி. வகையை சேர்ந்தது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பிப்ரவரி இரண்டாவது வாரம் முதல் மார்ச் மாதம் வரை சேகரிக்கப்பட்ட 144 மாதிரிகள் மாநில மரபணு பகுப்பாய்வுக் கூடத்தில் பகுப்பாய்வு செய்யப்பட்டது. அதில் 83.6 சதவீதம் எக்ஸ்.பி.பி. வகையை சேர்ந்தது என உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதன் முதலில் தமிழ்நாட்டில் எக்ஸ்.பி.பி. கொரோனா உறுதி செய்யப்பட்டதாகவும் இது வரை தமிழ்நாட்டில் எக்ஸ்.பி.பி. வகையின் 13 உட்பிரிவுகள் கண்டறியப்பட்டது. மேலும் எக்ஸ்.பி.பி. வகை கொரோனா பாதிப்புக்கு பெரிய அளவில் மருத்துவ சிகிச்சை தேவைப்படாத காரணத்தால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.