யாகி புயல் - வியட்நாமில் பலி எண்ணிக்கை 226

September 13, 2024

வியட்நாமில் யாகி புயல் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 226 ஆக உயர்ந்துள்ளது. பிலிப்பைன்சில் உருவான யாகி புயல் வியட்நாமை தாக்கியது. வடக்கு வியட்நாமின் குவாங் நின், ஹைடாங் மற்றும் ஹோ பின் ஆகிய கடலோர மாகாணங்களில் யாகி புயல் மணிக்கு 149 கி.மீ வேகத்தில் வீசியது. இது தலைநகர் ஹனோயில் கரையை கடந்தது. இந்த நூற்றாண்டின் மிகப் பயங்கரமான புயலாக கருதப்படும் யாகி, வியட்நாமை முழுமையாக உலுக்கியது. கனமழை, வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் வடக்குப் பகுதியை […]

வியட்நாமில் யாகி புயல் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 226 ஆக உயர்ந்துள்ளது.

பிலிப்பைன்சில் உருவான யாகி புயல் வியட்நாமை தாக்கியது. வடக்கு வியட்நாமின் குவாங் நின், ஹைடாங் மற்றும் ஹோ பின் ஆகிய கடலோர மாகாணங்களில் யாகி புயல் மணிக்கு 149 கி.மீ வேகத்தில் வீசியது. இது தலைநகர் ஹனோயில் கரையை கடந்தது. இந்த நூற்றாண்டின் மிகப் பயங்கரமான புயலாக கருதப்படும் யாகி, வியட்நாமை முழுமையாக உலுக்கியது. கனமழை, வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் வடக்குப் பகுதியை கடுமையாக பாதித்தது. இதன் விளைவாக 219 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. வெள்ள நீரில் மூழ்கிய கிராமங்களில் இருந்து மேலும் 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதால், வியட்நாமில் யாகி புயல் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 226 ஆக உயர்ந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu