கேரளாவில் 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

November 23, 2023

கேரளாவில் மேலும் ஐந்து நாட்களுக்கு கனமழை வாய்ப்பு உள்ளதால் 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை - தமிழகம் இடையே இடையே புயல் வலுப்பெற்று வருவதால் கனமழை பெய்து வருகிறது.மேலும் இது அடுத்த மூன்று நாட்களுக்கு நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று பெய்த கனமழை காரணமாக திருவனந்தபுரம் மாவட்டத்தில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டது. மேலும் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல இடங்களில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்தது. […]

கேரளாவில் மேலும் ஐந்து நாட்களுக்கு கனமழை வாய்ப்பு உள்ளதால் 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை - தமிழகம் இடையே இடையே புயல் வலுப்பெற்று வருவதால் கனமழை பெய்து வருகிறது.மேலும் இது அடுத்த மூன்று நாட்களுக்கு நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று பெய்த கனமழை காரணமாக திருவனந்தபுரம் மாவட்டத்தில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டது. மேலும் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல இடங்களில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இதனால் அங்கு வசிப்பவர்கள் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு மாற்றப்பட்டனர். மேலும் மின்தடை பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சபரிமலை பகுதிகளிலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் சபரிமலைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து திருவனந்தபுரம் மற்றும் இடுக்கி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலேர்ட்டும், கொல்லம், ஆலப்புழா, கோட்டையம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 28ஆம் தேதி வரை கேரளாவில் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu