இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு அடுத்த ஐந்து நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொதுவாக தமிழகத்தில் கத்திரி வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக சேலம், ஈரோடு, கரூர் உள்ளிட்ட இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகி வருகிறது. அதனால் இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு அடுத்து ஐந்து நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இன்றும் நாளையும் வெப்ப அலை வீசும் எனவும் தெரிவித்துள்ளது. தெலுங்கானா,கர்நாடகா, ஆந்திரா, கேரளாவிலும் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.