ஏமனில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி முப்பது பேர் பலியாகி உள்ளனர்.
ஏமனில் மண்ணில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதில் சிக்கி முப்பது பேர் பலியாகினர். மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர். பாதிப்படைந்தவர்களை மீட்பு படையினர் நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளனர். இந்த கனமழை மேலும் சில நாட்கள் நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை கூடும் என்று அஞ்சப்படுகிறது.