செங்கடலில் சென்ற கிரீஸ் நாட்டு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
காசா போரில் ஹமாஸுக்கு ஆதரவாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செயல்படுகிறார்கள். இவர்கள் செங்கடல் வழியாக செல்லும் இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளின் கப்பல்களை தாக்கி வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஏமன் நாட்டு அருகே செங்கடலில் சென்று கொண்டிருந்த கிரீஸ் நாட்டுக்கு சொந்தமான சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். வெடிகுண்டுகளை ஆளில்லா படகில் நிரப்பி அதனை சரக்கு கப்பல் மீது மோத விட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் சரக்கு கப்பலுக்கு என்னவாயிற்று மற்றும் அதன் மாலுமிகளின் நிலை என்ன என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.