சென்னையில் நேற்று மட்டும் 91.74 மில்லியன் யூனிட் மின் பயன்படுத்தப்பட்டுள்ளதாக டான்ஜெட்கோ அறிவித்துள்ளது.
வெயில் காலங்களில் மின்சார தேவை என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வீடுகளில் குளிர்சாதன பெட்டிகள், ஏசி, ஏர் கூலர்கள், ஃபேன்கள் என எல்லாவற்றின் தேவையும் கணிசமான அளவு உயர்ந்துள்ளது. ஆனால் ஆய்வுகளின்படி வீட்டு உபயோகத்தை காட்டிலும், கடைகளுக்கான மின் தேவை தான் அதிக அளவில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், சென்னை மின் பயன்பாட்டில் மீண்டும் புதிய உச்சம் தொட்டுள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 91.74 மில்லியன் யூனிட் மின் பயன்படுத்தப்பட்டுள்ளதாக டான்ஜெட்கோ தெரிவித்திருக்கிறது. இதற்கு முந்தைய உச்சமாக ஒரே நாளில் 91.1 மில்லியன் யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.