கைபேசியில் வீடியோக்களை எடிட் செய்ய யூடியூப் கிரியேட் செயலி அறிமுகம்

யூடியூப் நிறுவனம், யூடியூப் கிரியேட் என்ற புதிய செயலியை வெளியிட்டுள்ளது. இதன் மூலம், கைப்பேசி மூலமாகவே வீடியோக்களை தரமான முறையில் எடிட் செய்யும் முடியும் என தெரிவித்துள்ளது. இதனால், யூடியூப் தளத்தில் வீடியோ வெளியிடும் பலருக்கும் நன்மை கிடைக்கும் என கூறியுள்ளது. யூடியூப் கிரியேட் செயலி கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது, இந்தியா உள்ளிட்ட 13 நாடுகளுக்கு இதன் சேவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை, பீட்டா பயனர்களுக்கு இந்த சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த […]

யூடியூப் நிறுவனம், யூடியூப் கிரியேட் என்ற புதிய செயலியை வெளியிட்டுள்ளது. இதன் மூலம், கைப்பேசி மூலமாகவே வீடியோக்களை தரமான முறையில் எடிட் செய்யும் முடியும் என தெரிவித்துள்ளது. இதனால், யூடியூப் தளத்தில் வீடியோ வெளியிடும் பலருக்கும் நன்மை கிடைக்கும் என கூறியுள்ளது.

யூடியூப் கிரியேட் செயலி கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது, இந்தியா உள்ளிட்ட 13 நாடுகளுக்கு இதன் சேவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை, பீட்டா பயனர்களுக்கு இந்த சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த செயலி அனைவருக்குமானதாக, எளிமையான முறையில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. அதன்படி, சாமானியர்களுக்கு வீடியோ எடிட் செய்வதில் ஏற்படும் பலதரப்பட்ட சவால்கள் இதில் இருக்காது. குறைந்த நேரத்தில் வீடியோக்களை எடிட் செய்ய முடியும். வீடியோ எடிட்டிங் செய்வதில் உள்ள அடிப்படை தேவைகளான ஆடியோ சேர்ப்பது, பில்டர் எஃபெக்ட் புகுத்துவது, நாய்ஸ் அகற்றுவது போன்ற சேவைகள் யூடியூப் கிரியேட்டில் எளிமையான வடிவில் கிடைப்பதாக கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu