இந்திய பங்குச் சந்தை தொடர்பான தகவல்களை பகிரும் பைனான்ஸ் இன்ப்ளுயன்சர்களுக்கு செபி கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வரும் நிலையில், சரண் ஹெக்டேவின் 1% கிளப் நிறுவனம் ஆர்.ஐ.ஏ (Registered Investment Advisor) உரிமம் பெற்ற முதலீட்டு ஆலோசகர் நிறுவனமாக மாறியுள்ளது. இந்தியாவில் முதல் முறையாக ஒரு பைனான்ஸ் இன்ப்ளுயன்சர் நிறுவனம் செபியின் அங்கீகாரம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஓராண்டாக, சமூக ஊடகங்கள் மூலம் போலி முதலீட்டு வாக்குறுதிகள் அளித்து பண மோசடி அதிகரித்து வருவதால், செபி இன்ப்ளுயன்சர்களை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 1% கிளப் தற்போது 45 பேருடன் செயல்பட்டு, 1000 வாடிக்கையாளர்களுக்கு நிதி ஆலோசனைகளை வழங்கி வருகிறது. அவர்கள் மேலாண்மை செய்யும் முதலீட்டு மதிப்பு ரூ.1000 கோடியாக உள்ளது. இந்த நிலையில், ஆர்.ஐ.ஏ உரிமத்தை பெற 6 முதல் 8 மாதங்கள் போராடியதாக சரண் ஹெக்டே தெரிவித்துள்ளார்.