திருக்கார்த்தியல் சிறுகதை தொகுப்புக்காக எழுத்தாளர் ராம் தங்கத்திற்கு யுவபுரஸ்கார் விருது

எழுத்தாளர் ராம் தங்கத்திற்கு சாகித்திய அகாடமியின் யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் எழுதிய திருக்கார்த்தியல் என்ற சிறுகதை தொகுப்புக்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நாகர்கோவிலை சேர்ந்த அவர் சிறு வயது முதலே வாசிப்பின் மீது ஆர்வம் கொண்டிருந்தார். தினகரன், ஆனந்த விகடன் போன்ற இதழ்களில் பணியாற்றி வந்த அவர், தற்போது முழு நேர எழுத்தாளராக உள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு, காந்தி ராமன் என்ற புத்தகத்தை முதன் முறையாக வெளியிட்டார். அதை தொடர்ந்து, ஊர் […]

எழுத்தாளர் ராம் தங்கத்திற்கு சாகித்திய அகாடமியின் யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் எழுதிய திருக்கார்த்தியல் என்ற சிறுகதை தொகுப்புக்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவிலை சேர்ந்த அவர் சிறு வயது முதலே வாசிப்பின் மீது ஆர்வம் கொண்டிருந்தார். தினகரன், ஆனந்த விகடன் போன்ற இதழ்களில் பணியாற்றி வந்த அவர், தற்போது முழு நேர எழுத்தாளராக உள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு, காந்தி ராமன் என்ற புத்தகத்தை முதன் முறையாக வெளியிட்டார். அதை தொடர்ந்து, ஊர் சுற்றி பறவை, மீனவ வீரனுக்கு ஒரு கோவில், ராஜவனம் புலிக்குத்தி ஆகிய நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான திருக்கார்த்தியல் என்ற சிறுகதை தொகுப்புக்கு தற்போது விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவர் சில சிறுவர் கதைகளை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்துள்ளார். அத்துடன், பல கட்டுரைகளை அமேசான் கிண்டிலில் மின் நூலாக வெளியிட்டுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu