உக்ரைனில் ராணுவ வயது வரம்பு குறைப்பு

April 4, 2024

உக்ரைனில் கட்டாய ராணுவ பணிக்கான குறைந்தபட்ச வயது வரம்பு குறைக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் கட்டாய ராணுவ சேர்க்கைக்கான குறைந்தபட்ச வயது வரம்பு 27 லிருந்து 25 ஆக குறைக்கப்பட்டுள்ளது. தற்போது உக்ரைன் ரஷ்யா இடையே போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், உக்ரைன் ராணுவத்தில் படை வீரர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் உக்ரைன் பின்னடைவை சந்தித்து வருகிறது. இந்நிலையில் கட்டாய ராணுவ பணியில் சேர்க்கப்படுவதற்கான வயது வரம்பை உக்ரைன் குறைத்துள்ளது. இதன் மூலம் படை வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அந்த […]

உக்ரைனில் கட்டாய ராணுவ பணிக்கான குறைந்தபட்ச வயது வரம்பு குறைக்கப்பட்டுள்ளது.

உக்ரைனில் கட்டாய ராணுவ சேர்க்கைக்கான குறைந்தபட்ச வயது வரம்பு 27 லிருந்து 25 ஆக குறைக்கப்பட்டுள்ளது. தற்போது உக்ரைன் ரஷ்யா இடையே போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், உக்ரைன் ராணுவத்தில் படை வீரர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் உக்ரைன் பின்னடைவை சந்தித்து வருகிறது. இந்நிலையில் கட்டாய ராணுவ பணியில் சேர்க்கப்படுவதற்கான வயது வரம்பை உக்ரைன் குறைத்துள்ளது. இதன் மூலம் படை வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அந்த நாடு முடிவு செய்துள்ளது. இதற்கான மசோதா கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. ஆனால் அதிபர் ஜலன்ஸ்கி தற்போது தான் அதில் கையெழுத்திட்டுள்ளார். எனவே தற்போது அது அமலுக்கு வந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu