பிரபல துரித வர்த்தக நிறுவனமான ஜெப்டோவின் மதிப்பு 5 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. ஜெனரல் கேட்டலிஸ்ட் பார்ட்னர்ஸ் தலைமையில் டிராகன் பண்ட் மற்றும் எபிக் கேப்பிட்டல் மூலம் 340 மில்லியன் டாலர்கள் நிதி அளிப்பு நடைபெற்ற பிறகு, ஜெப்டோ நிறுவனத்தின் சந்தை மதிப்பு 40% உயர்ந்து இத்தகைய சாதனை எட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2021 ல் ஸ்டான்ஃபோர்ட் பட்டதாரிகள் ஆதித் பலிச்சா மற்றும் கைவல்யா வோரா ஆகியோரால் நிறுவப்பட்ட ஜெப்டோ, இந்தியாவின் பிரபலமான துரித வர்த்தக நிறுவனமாக உள்ளது. மும்பையை தலைமையிடமாக கொண்ட ஜெப்டோ, மார்ச் 2025 க்குள் தனது கிடங்குகளை 700 க்கும் மேலாக இரட்டிப்பாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது மற்றும் பொது பட்டியலுக்கு தயாராகி வருகிறது.