ஹுருன் பட்டியலில் இளம் கோடீஸ்வரராகி சாதனை படைத்தார் ஜெப்டோ இணை தோற்றுநர்

August 29, 2024

ஹுருன் நிறுவனம் 2024 ஆம் ஆண்டுக்கான இந்திய பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இளம் கோடீஸ்வரராக ஜெப்டோ இணை தோற்றுநர் கைவல்யா வோரா இடம் பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ. 3,600 கோடி ஆகும். கடந்த 2022ஆம் ஆண்டு, அவருக்கு 19 வயதாகும் போது, கைவல்யா வோரா ஹுருன் பட்டியலில் முதல் முறையாக அறிமுகமானார். தற்போது 21 வயதாகும் அவர் பட்டியலில் இடம்பிடித்துள்ள இளம் கோடீஸ்வரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மேலும், ஃபோர்ப்ஸ் 30 அண்டர் […]

ஹுருன் நிறுவனம் 2024 ஆம் ஆண்டுக்கான இந்திய பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இளம் கோடீஸ்வரராக ஜெப்டோ இணை தோற்றுநர் கைவல்யா வோரா இடம் பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ. 3,600 கோடி ஆகும்.

கடந்த 2022ஆம் ஆண்டு, அவருக்கு 19 வயதாகும் போது, கைவல்யா வோரா ஹுருன் பட்டியலில் முதல் முறையாக அறிமுகமானார். தற்போது 21 வயதாகும் அவர் பட்டியலில் இடம்பிடித்துள்ள இளம் கோடீஸ்வரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மேலும், ஃபோர்ப்ஸ் 30 அண்டர் 30 ஆசியா பட்டியலிலும் இவர் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகப் படிப்பை பாதியில் நிறுத்திய அவர், ஆதித் பலிச்சாவுடன் இணைந்து ஜெப்டோ நிறுவனத்தை நிறுவினார். தற்போது 22 வயதாகும் ஆதித் பலிச்சா, ஹுருன் பட்டியலில் இடம்பிடித்துள்ள 2வது இளமையான கோடீஸ்வரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும், இவர்கள் இணைந்து உருவாக்கிய ஜெப்டோ நிறுவனம், 1.4 பில்லியன் டாலர் மதிப்புள்ள யூனிகார்ன் நிறுவனமாக வளர்ந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu