ஜிம்பாப்வே அதிபர் எம்மர்சன் மீண்டும் வெற்றி பெற்றார்

August 28, 2023

ஜிம்பாப்வே அதிபர் தேர்தலில் அதிபர் எம்மர்சன் மங்கக்வா மீண்டும் வெற்றி பெற்றார். ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயில் எமர்சன் மங்கக்வா தலைமையில் அதிபர் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு கடந்த 23, 24 தேதிகளில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இவருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் நெல்சனுக்கும் இடையே கடும் போட்டி நடைபெற்றது. தேர்தலில் ஓட்டுகள் எண்ணப்பட்டு அதிபர் எமர்சன் 52.6% ஓட்டுகள் வாக்குகள் பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. நெல்சன் 44 சதவீத வாக்குகள் பெற்றார். இதில் அதிபர் எமர்சன் […]

ஜிம்பாப்வே அதிபர் தேர்தலில் அதிபர் எம்மர்சன் மங்கக்வா மீண்டும் வெற்றி பெற்றார்.

ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயில் எமர்சன் மங்கக்வா தலைமையில் அதிபர் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு கடந்த 23, 24 தேதிகளில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இவருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் நெல்சனுக்கும் இடையே கடும் போட்டி நடைபெற்றது.

தேர்தலில் ஓட்டுகள் எண்ணப்பட்டு அதிபர் எமர்சன் 52.6% ஓட்டுகள் வாக்குகள் பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. நெல்சன் 44 சதவீத வாக்குகள் பெற்றார். இதில் அதிபர் எமர்சன் மீண்டும் வெற்றி பெற்றார். இந்த தேர்தல் முடிவுகளை எதிர்க்கட்சி ஏற்கவில்லை. இதுகுறித்து எதிர்க்கட்சி செய்தி தொடர்பாளர் கூறுகையில், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்ட நாளுக்கு முன்னதாகவே அவசரமாக வெளியிடப்பட்டது சந்தேகத்தை கிளப்பி உள்ளது. எனவே அதை நாங்கள் நிராகரிக்கிறோம் என்றார். இதனால் அங்கு போராட்டம் வெடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu